சிங்கப்பூரில் கடன் தொல்லை கொடுத்த 23 வயதுடைய இளைஞன் கைது!!
சிங்கப்பூரில் கடன் தொல்லை வழக்கில் 23 வயதான நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த நபர் மூன்று வீடுகளில் முன் கதவு மற்றும் சுவர்களுக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் கடன் தொல்லை தொடர்பான கிராஃபிட்டிகளையும் சுவற்றில் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த நபரிடம் இருந்து பெட்ரோல் பாட்டில், லைட்டர், ஹெல்மெட் உள்ளிட்ட பல பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
இதுபோன்று சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் இது போன்ற நபர்களிடமிருந்து விலகி இருக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
இது போன்ற குற்றங்களை முதல்முறை குற்றம் புரிபவர்களுக்கு $5,000 முதல் $50,000 வரை அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 6 பிரம்படிகள் வழங்கப்படும்.