கள்ளப் பணத்தை கைமாற்ற உதவி செய்ததாக 20 வயது இளைஞர் கைது…!!!

கள்ளப் பணத்தை கைமாற்ற உதவி செய்ததாக 20 வயது இளைஞர் கைது...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கருப்பு பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் மற்றும் கணினிகளை ஹேக் செய்தல் உள்ளிட்ட சட்டவிரோத பணமோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில்,ATM மெஷினில் இருந்து பணத்தை எடுத்து மற்றொரு நபருக்கு எடுத்து கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுத்தால் அவருக்கு பணம் கொடுக்கப்படும் தெரிய வந்தது.

சிங்கப்பூர் காவல்துறை இந்த தகவலை கூறியது.

பணம் எடுக்க பயன்படுத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகள் சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகளின் தீவிர விசாரணைக்கு பின்னர் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் அவரை போலீசார் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கைது செய்தனர்.

அவரிடம் சிக்கிய 2 வங்கி அட்டைகள் மற்றும் 2 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபருடன் குற்றத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.