இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்…!!!

இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்த 12 வயது மலேசியச் சிறுவன்...!!!

மலேசியாவைச் சேர்ந்த இஸ் இமில் என்ற 12 வயது சிறுவன் கணிதத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படிக்கவிருக்கிறார்.

இவரது இந்த இளம் வயதுச் சாதனை அனைவராலும் பாராட்டப் பெற்றது.

தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட இளைய மாணவர் என்ற சாதனையை இஸ் இமில் பெற்றுள்ளார்.

யுஎம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் அசுவான் அபு ஒஸ்மான், பல்கலைக்கழகத்தின் சிறப்புக் குழுவினால் நடத்தப்பட்ட நேர்காணலில் சிறந்து விளங்கியதையடுத்து இம்மிலுக்கு இளங்கலைப் பட்டம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர் அவரது சேர்க்கை UM செனட்டால் அங்கீகரிக்கப்பட்டது.

சிறுவனின் சாதனை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

அவர் மிகவும் இளம் மாணவன் என்பதால் பல்கலைக்கழக சூழலுடன் பழகுவதற்கு இமிலுக்கு போதிய கால அவகாசம் வழங்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.