ரயிலில் பணயக்கைதிகளாக இருந்த சூழ்நிலை கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது எப்படி?
மேற்கு சுவிட்சர்லாந்தில் ஒரு தனிநபர், ரயில் பயணிகள் மற்றும் நடத்துனர் உட்பட 15 பேரை சிறைபிடித்தார்.
இச்சம்பவம் பிப்ரவரி 8ஆம் தேதி அன்று இரவு 6:35 மணி முதல் 10:30 மணி வரை நிகழ்ந்தது.
அந்த நபர், கோடாரி மற்றும் கத்தி வைத்திருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அந்த நபர் ஃபார்ஸி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார் என்று கூறப்படுகிறது.
காவல்துறையினர் அந்த நபருடன் whatsapp மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் கழித்து அதிகாரிகள் ரயிலை முற்றுகையிட்டனர்.
அந்த நபர் அதிகாரிகளை கோடாரியால் தாக்க முயன்ற போது, ஒரு அதிகாரி அவரை சுட்டுக் கொன்றார்.
பணயக்கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அவர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.