இறந்த நபரின் உடைமைகளை திருடிய நபர்!! விதிக்கப்பட்ட தண்டனை!!
சிங்கப்பூரில் இறந்த நபரின் உடைமைகளை திருடிய 52 வயது நபருக்கு 4 மாதங்கள் மற்றும் 4 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு, ஒரு குடியிருப்பு பகுதியின் அடிவாரத்தில் 22 வயது இளைஞன் அசையாமல் தரையில் கிடப்பது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த துணை மருத்துவர்கள் அந்த நபர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.
இறந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்த 52 வயதான அந்த நபர் மாடிக்கு சென்ற போது இறந்த நபரின் பையை பார்த்தார்.
பிறகு அந்த பையை எடுத்து ஓரிடத்தில் மறைத்து வைத்துள்ளார்.
மறுநாள் அவர் அந்த பையை பார்த்தபோது அதில் லேப்டாப், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் தற்கொலை குறிப்பு அடங்கிய நோட்டு இருந்தது அவருக்கு தெரிய வந்தது.
அந்த 52 வயதான நபர், லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு மற்ற பொருட்களை தூக்கி எறிந்தார்.
அவரின் இந்த செயலால் இளைஞரின் மரணம் குறித்த விசாரணைகளில் ஆதாரம் கிடைக்காமல் அதிகாரிகள் தவித்தனர்.
பிறகு அந்த நபரை அடையாளம் கண்டு காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
மேலும் அந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக அவர்கள் கூறினர்.
இது போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் தீர்ப்பளிக்கப்படலாம்.