பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!!
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பிப்ரவரி 6ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொழிற்சாலையில் சுமார் 200 முதல் 300 பேர் வேலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்தபட்சம் 174 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடி விபத்தின் தாக்கம் காரணமாக குறைந்தது 10 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.