தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாடு!!

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாடு!!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டம், முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாட்டிற்கு பொன்னமராவதி ஒன்றியத்தில் இருந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்துகள் மூலம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த நிகழ்வை பொன்னமராவதி ஒன்றிய பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாகி ஜான், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என்ற உயரிய நோக்கத்தில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பொன்னமராவதி ஒன்றியத்தின் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர். உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக முருகேசன், புவியரசு, பழனியாண்டி, டேவிட் நெல்சன், டேவிட், முத்து உட்பட்ட ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

பொன்னமராவதி ஒன்றியத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் பங்கேற்கும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.