மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!!

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!!

பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள அரசுப்பள்ளியில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம், முள்ளிப்பட்டி பகுதியில் ரோஸ் தொண்டு நிறுவனம், டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன், ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொண்டு நிறுவன பணியாளர்கள் அகிலா முன்னிலை வகித்தனர்.

சமுதாய ஒருங்கிணைப்பாளர் சாத்தனூர் புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் தொடங்கிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வில் ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் பேசுகையில் பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும், நம் நாட்டின் முக்கிய தொழிலான வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தொழிலாக ஆயத்த ஆடை தொழிலே ஆகும் எனவும்.

படிக்கும் பருவத்திலே வளரிளம் பெண்கள் அதிக அளவில் பஞ்சாலைகளில் வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்,பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக் களைப்பது,பெண் குழந்தைகளின் சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது, குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள்181 மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 போன்ற விழிப்புணர்வை பள்ளி குழந்தைகளுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன்
விளக்கி கூறினார்.

மேலும் பெண்கள் கல்வியை ஊக்குவிப்போம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்டவைகளை ரங்கோலி கோலம் மூலமாக வரைந்து பெண்கள், வளரிளம் பெண்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் பொன்னமராவதி, அரிமளம், குண்ணன்டார்கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களிலுள்ள 30 கிராமங்களில் படம் வரைதல், கதை சொல்லுதல், விளையாட்டு, சைக்கிள் ஊர்வலம் பாரம்பரிய பாடல் மற்றும் நடனம் போன்ற பல்வேறு வடிவங்களில் கொண்டு சொல்லப்பட்ட உள்ளதாக ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் சுபலெட்சுமி, சங்கீதா, மஞ்சு பிரபா, சரண்யா, அழகுமணி,சுதா நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று முள்ளிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் கோலப்போட்டி நடத்தப்பட்டும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.