சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு SPASS பற்றிய சில தகவல்களை அறிவோமா!!
சிங்கப்பூரில் 2024 ஆம் ஆண்டு SPASS பற்றிய சில தகவல்களை அறிவோமா!!
சிங்கப்பூரில் நிறைய பெர்மிட்கள் உள்ளன.அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது S PASS.
ஆனால், S Pass க்கு ஆட்களை தேர்வு செய்வது நிறைய சிரமங்கள் உள்ளது.
அதற்கு காரணம் அவ்வப்போது மாறுகிற மாற்றங்களே.
தற்போது S Pass க்கான புதிய மாற்றங்களை MOM வெளியிட்டுள்ளது.
அதோடு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது Quota.
Quota என்பது குறைந்த சம்பளத்தில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் கிடைப்பதால் நிறைய கம்பெனிகள் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதால், சிங்கபூரர்களுக்கு வேலை இல்லாத நிலையை மாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டது.
S Pass வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
▪️Service Industries – இல் சுமார் 8 சிங்கப்பூரர்களுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே 7
வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூருக்கு எடுக்க முடியும்.
▪️இதைதவிர மற்ற Sectors களில் 4 சிங்கப்பூரர்களை வேலைக்கு எடுத்தால் மட்டுமே ஒரு வெளிநாட்டு ஊழியரை spass இல் எடுக்கலாம்.
அதனால் நிறைய கம்பெனிகள் spass இல் ஆட்களை தேர்வு செய்வதை தவிர்க்கின்றனர்
முதல் காரணம் Quota, அடுத்த காரணம் என்னவென்றால் சம்பளம். Spass இல் வேலை பார்ப்பவர்களுக்கு குறைந்தது $3150 சிங்கப்பூர் டாலர் சம்பளம் கொடுக்க வேண்டும்.
ஆனால், அடுத்து வரும் 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்தது $3650 சிங்கப்பூர் டாலர் சம்பளம் கொடுக்க வேண்டும்.
Financial & Service sector களுக்கு $3800 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக கொடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பளமுறை அதிகமாக இருப்பதால் வெளிநாட்டு ஊழியர்களை S Pass மூலம் சிங்கப்பூருக்கு அழைத்து வருவதற்கு ஒரு சில நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அதேபோல் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களின் குடும்பத்தை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லலாமா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. குறைந்தது $6000 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக இருந்தால் மட்டுமே அவர்களை அழைத்து வரமுடியும்.
இத்தகைய காரணங்களே S Pass இல் ஆட்களை எடுப்பதற்கு சிரமமாக அமைந்துள்ளது. இதற்கு மாற்றாக NTS permit போன்ற புதிய பெர்மிடுகளை MOM அறிமுகப்படுத்தி உள்ளது.