சுரங்க தொழிலாளர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது!! பரிதாபமாக உயிரிழந்த 6 பேர்!!

சுரங்க தொழிலாளர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது!! பரிதாபமாக உயிரிழந்த 6 பேர்!!

கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள ஃபோர்ட் ஸ்மித் நகரத்திற்கு அருகில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விமானத்தில் ரியோ டின்டோவின் சுரங்கத் தொழிலாளர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விமானம் ஃபோர்ட் ஸ்மித்தில் இருந்து டியாவிக் வைரச் சுரங்கத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை நியமித்துள்ளது.