எய்டு இந்தியா கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
ஜன 22: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி நெய்வேலியில் கணித போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஷீல்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பொன்னமராவதி வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரூபிபுளோரா முன்னிலை வகித்தார்.
பள்ளியின் இடைநிலை ஆசிரியரும் எய்டு இந்தியாவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ராஜா வரவேற்று பேசியதாவது மாணவர்களுக்கு கணிதத்திறன் வளர்ப்பதற்கு கணினி தொழில்நுட்ப முறையில் அன்னவாசல் ஒன்றியத்தில் வெள்ளனூர், ரெங்கம்மா சத்திரம் , வடசேரிபட்டிமற்றும் காவேரி நகர் ஆகிய ஆரம்பப் பள்ளிகளில் எய்டு இந்தியா மூலம் கணிதம் கற்பிக்கப்பட்டு வருகிறது இதில் மாணவர்களுக்கு கற்றல் திறன் முன்னேற்றம் உள்ளதை அறிய முடிகிறது தொடர்ந்து ஓர் ஆண்டு காலம் கற்பிக்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று பேசினார் . தொடர்ச்சியாக மாணவர்களுக்கு இடையே கணித போட்டிகள் நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஷீல்டு சான்றிதழ்களும் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் ஆசிரியப் பயிற்றுநர் கல்யாணி , எய்டு இந்தியா மாவட்ட இணை ஒருங்கினைப்பாளர் பிச்சம்மாள், பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்யா, துணைத்தலைவர் நாகராஜன் , எய்டு இந்தியா வட்டார பயிற்றுநர் விஜயசாந்தி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.