அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளரின் காளை!!

பொன்னமராவதி,ஜன.18- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளர் ஜெயராமன் அவர்களின் காளை வெற்றி பெற்றது.

ஜல்லிக்கட்டு காளையின் வெற்றிக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க நாணயத்தை காளையின் உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலர், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெயராமன் அவர்களிடம் வழங்குகிறார் .உடன் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் திரைப்பட நடிகர் சூரி உள்ளிட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியார்கள் என பலரும் உள்ளனர்.