பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!!

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை!!

பொன்னமராவதி,ஜன.14- பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்தாக கருதி சமாதானக் கூட்டம் பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் பொன்னமராவதி வட்டாட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் கீழத்தானியம் கிராமத்தில் மாவயல் அய்யனார் கோவில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாலும்,மேலும் கீழத்தானியம் ஊராட்சி தலைவர் இருதரப்பினரரும் தனித்தனியாக ஜல்லிக்கட்டு நடத்த ஊராட்சி தீர்மானம் நிறைவேற்ற இயலாது எனதெரிவிப்பதாலும், கீழத்தானியம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவாய்ப்புள்ளதால் வருகிற பிப்.2அன்று கீழத்தானியம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இருதரப்பினரிடையே சுமூக முடிவுகள் ஏதும் எட்டப்படாததால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது என்று பேசி முடிவு செய்யப்பட்டது.

இதில் இருதரப்பினரும் ஒத்துக் கொண்டு கையெழுத்திட்டனர். இதில் மண்டல துணைதாசில்தார் சேகர், காரையூர் வருவாய் ஆய்வாளர் பிருந்தா, கீழத்தானியம் ஊராட்சி தலைவர் நல்லையா, மற்றும் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், காரையூர் எஸ்.ஐ.நதியா, விஏஒ அமரன் மற்றும் ஏ.தரப்பினர் தங்கராஜ் மிராஸ், ரவிக்குமார், முருகேசன்,மகேந்திரன். துரைச்சாமி, பி தரப்பினர் சின்னத்துரை,கருப்பையா, நாராயணன், சின்னையா,சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்..