ஹோட்டலில் எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!!

ஹோட்டலில் எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!!

அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான டெக்ஸாசின், ஃபோர்ட் வர்த் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் ஜனவரி 8ஆம் தேதி அன்று Sandman ஹோட்டலில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த வெடி விபத்து எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மேலும் நான்கு பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டது, ஆனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அவர்கள் கூறினர்.