சிங்கப்பூரில் வேலை வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவில் விளையாடும் மோசடிக்காரர்கள்!!

சிங்கப்பூரில் வேலை வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவில் விளையாடும் மோசடிக்காரர்கள்!!

சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் வேலை வாய்ப்பு மோசடிகளில் குறைந்தது 180 பேர் சுமார் $2.6 மில்லியனை பறிகொடுத்துள்ளனர்.

மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை whatsapp மற்றும் telegram மூலம் தொடர்பு கொண்டு சமூக ஊடகங்களில் அணுகிறார்கள்.அவர்கள் கூறுவதை செய்யுமாறு சொல்வார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் அந்த பணிகளை முடித்த பிறகு அவர்களுக்கு சிறிய தொகை கமிஷனாக வழங்கப்படும்.

மேலும் அதிக பணத்தை பெற அவர்கள் அதிக பணிகளை மேற்கொள்ளுமாறும், அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று மோசடிக்காரர்கள் கூறுவார்கள்.

அதன் மூலம் பரிவர்த்தனைக்கான வழிமுறைகளை மோசடிக்காரர்கள் பெறுவார்கள்.

பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் மோசடி செய்யப்பட்டதை உணர்வார்கள்.

இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

மேலும் சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்தினர்.