சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி!!

சிங்கப்பூர் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி!!

சிங்கப்பூர் ‘Long Island’ திட்டத்துக்கான மணல் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை உறுதி செய்வதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் Desmond lee தெரிவித்துள்ளார்.

ஈஸ்ட் கோஸ்ட்டில் உள்ள திட்டத்திற்காக முறையான சோதனைகள் நடத்தப்படும் என்று கூறினார். அதற்காக கடலில் இருந்து சுமார் 1000 கார்ப்பக திடல்கள் அளவிலான நிலங்கள் மீட்கப்படும் என்று கூறினார்.

வணிக ரீதியாக பல இடங்களிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்படும் என்றார்.

மணல் எடுக்கப்படும் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு இறக்குமதியாளர்கள் இணங்க வேண்டும் என்றும் கூறினார்.

அத்தோடு நிறுவனங்களும் மணல் எடுக்கப்படும் நாடுகளில் உள்ள உள்ளூர் சுற்றுச்சூழல் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூர் ‘Long Island’ நிலமீட்பு திட்டத்தைப் பற்றி கூறியிருந்தார். இவ்வாண்டு அந்த திட்டத்திற்கான ஆய்வு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.