பொன்னமராவதி காவல்நிலையத்தில் திரண்ட பொதுமக்கள்!!
பொன்னமராவதி,ஜன.10-
பொன்னமராவதி அருகே கோயில் ஆட்டினை திருவடியவர்களை கண்டுபிடிக்க கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தில் முறையிட்டனர். பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் ஊரின் தேவைக்காக ஊர் ஆடு என்று சொல்லக்கூடிய கோயில் ஆடு வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த ஆடுகளின் வருவாயினை ஊர் மற்றும் கோயில் செலவுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆட்டினை பராமரிக்க ஊரின் சம்பளத்தில் ஒரு பணியாளர் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆட்டில் 10ஆடுகள் கடந்த டிசம்பர் மாதம் திருடுபோயியுள்ளது. ஆடு திருடியவனை கண்டுபிக்க கோரி கடந்த டிசம்பர் 20தேதி பொன்னமராவதி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரை கண்டுபிடிக்கவில்லை.
இதனையடுத்து ஊர்கமிட்டி தலைவர் சீனிவாசன் தலைமையில் ஊராட்சித்தலைவர் ராமாயிமணி,ஒன்றியக்கவுன்சிலர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றியக்கவுன்சிலர் ராசமாணிக்கம், ராமசந்திரன் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து பொன்னமராவதி காவல்நிலையத்தில் நேற்று மீண்டும் மனு அளித்து ஆடு திருடியவர்களை கண்டுபிடிக்கவேண்டும், ஊர்பொதுமக்கள் சார்பில் சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊரில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொன்னமராவதி காவல்நிலையத்தில் மனு அளித்து முறையீடு செய்தனர்.