இந்தோனேஷியாவில் புதிதாக விதிக்கப்பட்ட தடை!!

இந்தோனேசியாவில் ஜனவரி 6ஆம் தேதி அன்று இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட 226 நாய்களை ஏற்றிச் சென்ற ட்ரக்கை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இச்சம்பவம் ஜாவா தீவில் உள்ள செமராங் நகரில் நடந்ததாக அவர்கள் கூறினர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் மீது விலங்கு நலச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும். அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாய் மற்றும் பூனை இறைச்சியை விற்பனை செய்யும் ஒரு சில நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.விலங்கு நல ஆர்வலர்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

இந்தோனேசியாவில் செமராங் உட்பட சில நகரங்கள் நாய் மற்றும் பூனை இறைச்சியை விற்க தடை விதித்துள்ளது.