கடலில் 23 மணி நேரம் தத்தளித்த கொண்டிருந்த 61 வயதான நபர்!! உயிர் பிழைத்த அதிசயம் எப்படி?

நியூசிலாந்து கடலில் சுமார் 23 மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்த 61 வயதான மீனவர் ஒருவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றினர்.

திரு. வில் பிரான்சன் என்ற மீனவர் ஜனவரி 2ஆம் தேதி அன்று கடலுக்குள் தனியாக மீன்பிடிக்கச் சென்றார்.

மார்லின் மீனை பிடிக்க முயன்ற போது அவர் கடலுக்குள் தவறி விழுந்தார்.கடலில் விழுந்த அவர் வெகு தூரம் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டார்.

அதனால் அவரால் படகிற்கு திரும்ப முடியவில்லை.அவர் மிகவும் சோர்வாக இருந்ததால் அவரால் நீந்தவும் முடியவில்லை.

அதனால் அவர் குளிர்ந்த நீரில் அன்றிரவை கழித்தார்.அவர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் அழையா விருந்தாளியாக சுறா மீன் ஒன்று அவரின் அருகில் வந்தது.

அதிர்ஷ்டவசமாக அந்த சுறா மீன் அவரை தாக்கவில்லை.மாறாக சுறா மீன் அவரை முகர்ந்து விட்டு, அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றதாக அவர் கூறினார்.

மறுநாள் அவர் தனது கைக்கடிகாரத்தின் மீது படும் சூரிய ஒளியை பயன்படுத்தி மற்ற மீனவர்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார்.

அப்போது அங்கு வந்த மூன்று மீனவர்கள் அவரை காப்பாற்றினர்.அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் உயிர் பிழைத்தது அதிசயம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவரது படகு இருக்கும் இடம் தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.