சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் நான்கு நாட்கள் அதிரடியாக நடந்த சோதனை!! 61 பேருக்கு அபராதம்!!

சிங்கப்பூரில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த 177 பேர் மின் சிகரெட்டுகளை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களில் 61 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற 116 பயணிகள் மின்சிகரெட்டுகளை அகற்றியதால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

இந்த சோதனை நடவடிக்கைகள் சுகாதார அறிவியல் ஆணையம் மற்றும் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகளை விற்பது, வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக S$2000 அபராதம் விதிக்கப்படும்.