சுரங்கப்பாதை ரயில்கள் மோதி கொண்டு விபத்து!!

நியூயார்க் மாநகரங்களில் ஒன்றான மன்ஹாட்டனில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதி தடம் புரண்டன.இந்த விபத்தில் 24 பேர் காயமடைந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

இச்சம்பவம் ஜனவரி 4ஆம் தேதி அன்று மதியம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 300 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில், வேலை ரயில் உடன் மோதியது.

வேலை ரயிலில் நான்கு போக்குவரத்து தொழிலாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம், வேலை ரயில் தடங்களை மாற்றிக் கொண்டிருந்தபோது நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்தை தொடர்ந்து மற்ற ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.