தெற்கு தாய்லாந்தின் கிராபி மாகாணத்தில் உள்ள Phi Phi தீவுகளுக்கு அருகில் அந்தமான் கடலில் வெள்ளை திமிங்கலம் நீந்திக் கொண்டிருந்தது.
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் வெள்ளை திமிங்கலத்தை வீடியோ எடுத்துள்ளார். இதை தாய்லாந்து பூங்கா அதிகாரிகள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தாய்லாந்து கடலில் காணப்பட்ட முதல் திமிங்கலம் இதுவாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.இந்த வெள்ளைத் திமிங்கலம் எந்த இனத்தைச் சேர்ந்தது என்பது தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் திமிங்கலம் காணப்பட்ட பகுதியில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.