ஜனவரி 2ஆம் தேதி அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனிடா விமான நிலையத்தில் ஒரு விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பானிய கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது.
இந்த விபத்தில் சுமார் 15 பில்லியன் யென் இழப்பு ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இந்த இழப்பு, காப்பீடு மூலம் ஈடுசெய்யப்படும் என்று நிறுவனம் கூறியது.
இந்த விபத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் கடலோரக் காவல் படை விமானத்தில் இருந்த ஆறு பேரில் 5 பேர் உயிரிழந்தனர் என்றும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.