சிங்கப்பூரில் ஒரு பெண் உட்பட 6 பேரை தாக்கிய 30 வயது நபரை ஜனவரி இரண்டாம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
30 வயதான நபர் 18 வயது இளைஞரை முதலில் தாக்கினார். அதை தடுக்க முயன்ற ஐந்து பேரையும் அவர் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஜனவரி 1ஆம் தேதி அன்று அதிகாலை ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அதிகாலை 4.10 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர் விசாரணைகள் மற்றும் போலீஸ் கேமராக்கள் மூலம் அந்த நபரை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றுள் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.