ஜனவரி 1ஆம் தேதி அன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
31,800 க்கும் அதிகமான மக்கள் தற்காலிக மையங்களில் தங்கி இருப்பதாக அவர்கள் கூறினர்.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் பல கட்டிடங்கள் நாசம் அடைந்தன.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகள் பல சேதம் அடைந்தன.
பல நகரங்களில் வீடுகள் தரைமட்டமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இஷிகாவா நகரில் கிட்டத்தட்ட 34,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பல நகரங்களில் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர்.ஜப்பான் வானிலை ஆய்வு மையம் பல நகரங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.