புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல சேதமடைந்தன.மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன மற்றும் ஓடுபாதையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அணுமின் நிலையங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.