பொதுமக்களே உஷார்!! மலிவு விலையா அல்லது உங்களுக்கு விரித்த வலையா? தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் டிசம்பர் மாதம் மலிவான சூட்கேஸ் விளம்பர மோசடியில் குறைந்தது 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் குறைந்தபட்சம் S$7,000ஐ இழந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் போலியான iShopChangi facebook பக்கத்தில் S$4க்கு ரிமோவா சூட்கேஸ்களை விற்பதற்கான விளம்பரங்களை பார்த்து அதை வாங்க முயன்றனர்.

அவர்கள் அந்த பதிவை கிளிக் செய்த பிறகு ஃபிஷிங் வெப்சைட்டுக்கு அனுப்பப்பட்டு பிறகு அவர்களது கிரெடிட் கார்டு விவரங்கள் பெறப்படும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும்.

முதலில் விளம்பரங்கள் உண்மையானதா என்பதை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்.

இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

மேலும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.