தங்களது வாழ்நாள் சேமிப்பை மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்த குடும்பம்!!

சிங்கப்பூரைச் சேர்ந்த திரு. சிங் குடும்பத்தார் தனது வாழ்நாள் சேமிப்புத் தொகையான S$150,000ஐ மோசடிக்காரர்களிடம் இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவம்பர் 26 ஆம் தேதி அன்று திரு. சிங் மற்றும் அவரது மனைவி, பேஸ்புக் பக்கத்தில் ஆர்கானிக் முட்டை பற்றிய விளம்பரத்தை பார்த்து அதை வாங்க முயன்றனர்.

அவர்கள் ஆர்டர் பட்டனை கிளிக் செய்த பிறகு ஜேசன் என்ற பெயரில் உள்ள ஒரு whatsapp chatற்கு சென்றது.அவர்கள் ஒரு ஆப் மூலம் 60 முட்டைகளுக்கான முன்பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டார்கள்.

அந்த app-ற்கான லிங்கையும் ஜேசன் அவருக்கு அனுப்பி வைத்தார்.மீதமுள்ள தொகையை முட்டைகளைப் பெற்ற பிறகு செலுத்தலாம் என்று ஜேசன் கூறினார்.

அந்த app மூலம் UOB வங்கியின் பக்கத்தைப் போலவே இருந்த போலி UOB பக்கத்தில் கட்டணம் செலுத்த திரு. சிங் அவரது UOB கணக்கின் தகவல்களை பதிவு செய்தார்.ஆனால் அவரால் கட்டணம் செலுத்த முடியவில்லை.

பரிவர்த்தனை தோல்வி அடைந்ததால் ஆர்டரை ரத்து செய்ய திரு. சிங் முயன்றார்.ஆனால் ஜேசன் மறுநாள் முட்டைகளை டெலிவரி செய்வதாக கூறி அவரை தொடருமாறு வலியுறுத்தினார்.மறுநாள் திரு. சிங்கிற்கு முட்டைகள் வரவில்லை.

அதற்கு பதிலாக UOB வங்கி அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்தது.அவரின் கிரெடிட் கார்டில் இருந்து மிகப்பெரிய பரிவர்த்தனை நடந்தது குறித்து அதிகாரி விசாரித்தார்.அதை மறுத்த திரு. சிங், தனது UOB மற்றும் DBS வங்கி கணக்குகளை சரி பார்த்தார்.

அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

அவரது வங்கி இருப்பில் பணம் இல்லை என்பதை கண்டு அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்ததாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பரிவர்த்தனைகள் குறித்த எந்த ஒரு குறுஞ்செய்தியும் அவருக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.மேலும் வங்கிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று திரு. சிங் கூறினார்.