TEP, TWP பாஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை அதிகமானோர் சிங்கப்பூருக்கு சென்றுள்ளனர். S-Pass இல் ஆட்களை எடுப்பதற்கு சற்று சிரமமாக இருந்த நிலையில் TEP, TWP பாஸ்களில் ஆட்களை எடுத்தனர்.ஏனென்றால்,இந்த பாஸ்களுக்கு எளிதாக Approval கிடைத்துவிடும். ஆனால், இந்த பாஸ்களுக்கான அனுமதி காலஅவகாசம் 3 முதல் 6 மாதங்கள் மட்டுமே.
இந்த பாஸ்கள் மூலம் சிங்கப்பூர் போவதற்கு விண்ணப்பிப்பவர்களில் ஒரு சிலருக்கு போலியான அல்லது தவறான ஆவணங்களைச் சமர்ப்பித்து வேலை வாங்கி கொடுத்துள்ளனர். அதனால் மீண்டும் அவர்களால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவம் நமது ஃபாலோவர் ஒருவருக்கு நடந்துள்ளது.அவர் TEP – இல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அனுமதி காலஅவகாசம் முடிந்தவுடன் இந்தியாவிற்கு திரும்பினார்.தற்போது அவர் வேறொரு வேலைக்கு வேறொரு பாஸ் மூலம் செல்ல திட்டமிட்ட அவர் அப்ளை செய்ய முயற்சித்தார்.இதற்குமுன் அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததால் அவரின் விண்ணப்பம் ரிஜெக்ட் செய்யப்பட்டது. அவர் போலியான ஆவணங்களை சமர்பித்ததே அதற்கு முக்கிய காரணம்.
நீங்கள் வேலைக்கு விண்ணப்பிப்பவராக இருந்தால் உங்களின் ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவும். போலியான அல்லது தவறான தகவல்களை அளிக்க வேண்டாம்.நீங்கள் அல்லது உங்களின் ஏஜென்ட் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தால் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது. இது போன்ற சம்பவம் நேர்ந்தால்,ஒரு சில ஏஜென்ட்கள் உங்களின் சான்றிதழ்களை(Certifications) சரிபார்த்து Verified Certification வாங்கி தருவார்கள். அதனை வைத்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.