மலேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிளந்தான் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடுமையான கனமழை காரணமாக 3 ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளது.
தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள Golok ஆற்றின் நீர்மட்டம் எச்சரிக்கை அளவைவிட 8 மீட்டருக்கு மேல் உயர்ந்துள்ளது.
தொடர் மழையால் மாராங் மற்றும் டுங்குன் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.