அனைவரும் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு!! PSA Driver Job!!

இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால், தயவு செய்து முழுமையாக படியுங்கள்!! முழுமையாக படிக்கா விட்டால் இழப்பு உங்களுக்கே!!

சிங்கப்பூர் டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அங்கு டிரைவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் செல்ல முடியுமா? என்ற கேள்வி ஒரு சிலரிடம் இருக்கும். ஒரு சிலருக்கு அதற்கான பதில் தெரிந்திருக்கும். ஒரு சிலருக்கு தெரிந்திருக்காது. PORT OF SINGAPORE AUTHORITY (PSA) யில் இந்தியா லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியும். PSA டிரைவர் வேலை கிடைக்க வேண்டும் என்று பலர் காத்திருக்கின்றனர்.தற்போது இந்த வேலைக்கு ஏஜென்சிகள் ஆட்களை எடுத்து வருகின்றனர்.ஏஜென்சிகளில் ஒரு சில நேர்மையான ஏஜென்ட்களும், போலியான ஏஜென்ட்களும் இருக்கிறார்கள். நேர்மையான ஏஜென்ட்கள் சிறந்த முறையில் ஆட்களை தேர்ந்தெடுத்து, அதற்கான உரிய கட்டணத்தை பெற்று கொண்டு நல்ல முறையில் சிங்கப்பூருக்கு அனுப்புகின்றனர். ஒரு சில போலி ஏஜென்ட்கள் ட்ரைனிங்க்காக கட்டணம் வசூலிக்கின்றார்கள்.விண்ணப்பிப்பவர்களிடம் PSA டிரைவர் வேலைக்கு ட்ரைனிங் கொடுப்பதற்கு 10,000 முதல் 20,000 வரை கட்டணமாக வசூலிக்கின்றனர்.

உங்களுக்கு இந்த வேலைக்காக ட்ரைனிங் கொடுக்கின்றனர். ஆனால், இந்த வேலைக்கு ஆட்களை எடுக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவு. உதாரணமாக : 100 பேர் தேவையென்றால் குறைந்தது 500 பேருக்கு ட்ரைனிங் கொடுப்பார்கள்.100 பேர் தேவைப்படுகிற இடத்தில் 500 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் ட்ரைனிங்கான பணத்தை வாங்கிக்கொண்டு அதிக லாபத்தை ஈட்டுகின்றனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரை தவிர, மீதமுள்ளவர்கள் அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அல்லது அவர்களுக்கு வேலை கிடைக்காமல் போக கூட வாய்ப்புண்டு.

ஏனென்றால், PSA டிரைவர் வேலை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அறிவிப்பு வரும். ஒரு வருடத்தில் இரண்டு முறை அறிவிப்பு வருவது மிகவும் அரிது.நீங்கள் ட்ரைனிங்க்காக செலுத்திய பணத்தை மீண்டும் திருப்பி கொடுக்க மாட்டார்கள்.உங்களுக்கு ட்ரைனிங் கொடுக்கப்பட்டுள்ளதால், பணம் திருப்பி தர முடியாது என்று கூறுவார்கள்.அதனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஏஜென்ட் நேர்மையானவர், கண்டிப்பாக வேலை வாங்கி தருபவராக இருந்தால் மட்டுமே இந்த வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் தெரியாத நபர் மூலம் சென்றால், ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த பதிவை நன்கு படித்துவிட்டு எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்!!.