டிசம்பர் 18ஆம் தேதி அன்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சீனாவை உலுக்கியது.
இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.சுமார் 982 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் டஜன் கணக்கானோரரை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் 145,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸாக இருப்பதால் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் உறைபனியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், அவர்களுக்கு தங்குமிடம் அமைத்து தருவதிலும் கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.