அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் 71 வயது முதியவரான திரு. க்ளின் சிம்மன்ஸ், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்நாளை கழித்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
செய்யாத குற்றத்திற்காக அவர் 48 ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் சிறையில் கழித்துள்ளார்.
கறுப்பினத்தவரான அவர் இந்த ஆண்டு ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
1975 ஆம் ஆண்டு திரு. க்ளின் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகிய இருவரும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிறகு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.சம்பவத்தின் போது தலையில் சுடப்பட்ட ஒரு இளம் வயது பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட்டனர்.
அடுத்தடுத்த விசாரணையில் அந்த பெண் சரியாக அடையாளம் காட்டினாரா என்பது குறித்து சந்தேகம் எழுந்தது.
மேலும் இந்த சம்பவத்தின் போது இருவரும் ஓக்லஹோமாவிலேயே இல்லை என்று விசாரணையில் கூறினர்.2008 ஆம் ஆண்டு டான் ராபர்ட்ஸ் விடுதலை செய்யப்பட்டார்.
டிசம்பர் 19ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் திரு. க்ளின் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டது.