சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!!

சீனாவின் வட மேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

155,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2500 கூடாரங்கள், 5000 படுக்கைகள் மற்றும் குளிரிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள 20,000 கோட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.