FairPrice சூப்பர்மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டே பால் பவுடரை திருடிய Nestle Brand Promoter!!

சிங்கப்பூரில் FairPrice சூப்பர்மார்க்கெட்டில் பணிபுரியும் Nestle Brand Promoter ஒருவர் மீது Nan பால் பவுடரை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் 83 முறை திருடியதாக தெரிவிக்கப்பட்டது. அதன் மொத்த மதிப்பு $26,000 சிங்கப்பூர் டாலர்.

அவர் திருடிய பால் பவுடர் சிலவற்றை ஆன்லைன் விற்பனை தளமான Carousell – இல் விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

33 வயதுடைய Andy Liow Boon Chin தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த குற்றத்திற்காக டிசம்பர் 19-ஆம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அவரது குற்றத்திற்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்மீது சுமத்தப்பட்டுள்ள மற்றொரு குற்றமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர் இவ்வாண்டு ஜூன் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.