டிசம்பர் 17ஆம் தேதி அன்று மாலை Wilmington-ல் அமெரிக்க அதிபர் Joe Biden-ன் பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது.
வில்மிங்டனைச் சேர்ந்த 46 வயதான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது காரை மதுபோதையில் ஓட்டியதால் இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த விபத்து தற்செயலாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அந்த நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஜோ பைடனும், அவரது துணைவியாரும் தலைமையகத்திலிருந்து வீட்டிற்கு புறப்படும் பொழுது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இருவரும் பாதுகாப்பாக அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.