மலேசியாவில் 17 வயதுடைய மேல்நிலைப்பள்ளி மாணவனை கொன்றதாக, 44 வயதான துணைக் காவல் கண்காணிப்பாளர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் டிசம்பர் 15ஆம் தேதியன்று நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
துணைக் காவல் கண்காணிப்பாளர் தனது காரைக் கொண்டு அந்த மாணவனின் இருசக்கர வாகனத்தில் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மாணவனுக்கு மார்பு மற்றும் வயிற்றில் காயங்கள் ஏற்பட்டன.அவரது மரணத்திற்கு அதுவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விபத்து நடப்பதற்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தது.
அவரது இந்த குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.மேலும் அவருக்கு குறைந்தது 12 பிரம்படிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.