டிசம்பர் 16-ஆம் தேதி வியட்நாமிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட Scoot விமானத்தில் பயணித்த பயணிகளிடம் இருந்து $31,000 வெள்ளியை 52 வயதுடைய Zhang Xiuqiang என்பவர் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது . அவர் மூன்று பயணிகளிடம் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது .
அவர் மீது மூன்று குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. விசாரணைக்காக அவர் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அவர் சீனா நாட்டைச் சேர்ந்தவர்.
வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்.அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம் .