வெளிநாட்டு ஊழியர்களே…..ஓர் மகிழ்ச்சியான செய்தி!! சொந்த வீட்டை நினைவூட்டும் வகையில் புது பொலிவுடன்……

நோய் தொற்று காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதி நோய் பரவும் இடங்களாக இருந்தது.2040-ஆம் ஆண்டிற்குள் தற்போதைய தங்கும் விடுதியின் தரநிலைகளை படிப்படியாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முன்னோடியாக மாதிரி அறைகள் உருவாக்கப்பட்டு, 8 வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைத்து சோதனை செய்தது.

அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாதிரி அறைகள் உருவாக்கப்பட்டது.

விடுதி அறைகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து சிங்கப்பூர் லிமிடெட் டார்மிட்டரி அசோசியேசன் நடத்தும் Project Commune திட்டம் பரிசீலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேறு எந்த விடுதியில் இல்லாத வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விடுதி அறையில் ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

ஊழியர்களில் ஒருவரான அர்ஜுன் ராஜா என்பவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவருக்கு வயது 30.

பொதுவாக தனியாக போனில் பேச வேண்டும் என்று விரும்பும்போது அறையிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய நிலை இருக்கும். ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள புதிய அறையில் தொலைபேசியில் பேசுவதற்கு தனி அறை இருப்பது மிகவும் பிடித்திருந்ததாக கூறினார்.

அதோடு ஓய்வெடுக்கவும், ஆடை அணிவதற்கும், சமைப்பதற்கும் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அங்கு ஊழியர்களின் சொந்த ஊர்களின் உள்ள நேரத்தை காட்டும் கடிகாரங்களும் இருந்தது.

அங்கு இருந்த அனுபவம் சொந்த வீட்டை நினைவூட்டுவதாக கூறினார்.அந்த அறையில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் வசிப்பவர்கள் அனைவரும் வீட்டைப் பற்றிய உணர்வை பெற வேண்டும் என்பதே நோக்கம்.சிங்கப்பூர் ஊழியர் விடுதி அமைப்பு, இந்தத் திட்டம் அதை உறுதிப்படுத்தும் ஒரு நல்ல முயற்சி என்று நம்புகிறது.