சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான…….

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ஆம் தேதியன்று அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன. சிங்கப்பூரில் அன்றைய தினத்தை எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதையும், வெளிநாட்டு ஊழியர்களை எவ்வாறு கௌரவிக்கின்றனர்? என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



https://www.sgtamilan.com/for-foreign-workers-in-singapore-2/: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான…….

இன்று(டிசம்பர் 18) சிங்கப்பூர் நாடு முழுவதும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை மனிதவள அமைச்சகத்தின் ACE பிரிவு சுமார் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் இம்மாதம் (டிசம்பர்) முழுவதும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 70,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இல்ல பணிப்பெண்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சிகள் மூன்று முக்கிய அம்சங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டின் மையப்பொருள் ”உணவு”.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி வெளிநாட்டு ஊழியர்களை சிறப்பிக்கும் வகையில் ”Our Migrants’ Kitchen” புத்தகம் வெளியிடப்பட்டது.அதோடு கண்காட்சித் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்துலக வெளிநாட்டு ஊழியர்கள் தினத்தை முன்னிட்டு இந்த புத்தகம் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நூலில் வெளிநாட்டு ஊழியர்களின் தாய்நாட்டு உணவு வகைகள் மட்டுமின்றி,சிங்கப்பூரில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களின் இனிப்பான கதைகளும் அடங்கும்.