யாரைதான் நம்புவது?? பயணிகளிடம் தங்களின் கைவரிசையை காட்டிய விமான ஊழியர்கள்!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள டெனெரிஃப் தீவின் தெற்கு விமான நிலைய ஊழியர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து €2 million மதிப்புள்ள பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் பல பொருட்களை கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ விற்றுள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதனால் அந்த தீவில் உள்ள 27 நகைக் கடைகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 20 விமான நிலைய ஊழியர்களிடம் விசாரணைகள் நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.

பயணிகள் தங்களது சரிபார்க்கப்பட்ட பைகளில் இருந்து பொருட்கள் காணாமல் போனதாக புகார் அளித்ததன் பேரில் விசாரணையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.