சிங்கப்பூரில் டிசம்பர் மாதம்(இம்மாதம்) இறுதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலான நாட்களில் மதியம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது ஒரு சில நாட்களில் மாலை வரை நீடிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
அடுத்த 2 வாரங்களில் பெரும்பாலான நாட்களில் 24°c முதல் 33°c வரை வெப்பநிலை இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் பதிவாக உள்ள மழைப்பொழிவின் அளவானது நாடு முழுவதும் பதிவாகும் சராசரி அளவைவிட அதிகமாகும் என்று தெரிவித்தது.
சில நாட்களில் 34°c வரை வெப்பநிலை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.