மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது .
கிருமி பரவல் அதிகரிப்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.