பறவை காய்ச்சல் வேகமாக பரவுகிறதா?

ஜெர்மனியின் Guetersloh பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் உள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து 30,000 வாத்துகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெர்மனி அண்மை வாரங்களில் இது போன்ற பல பறவைக் காய்ச்சல் வழக்குகளை எதிர்நோக்கி வருகிறது.

இந்த பறவைக் காய்ச்சலால் கடந்த ஆண்டுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக காட்டுப் பறவைகளால் இந்த நோய் தொற்று ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க பண்ணைகளில் உள்ள பறவைகளை உள்ளேயே வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.