டிசம்பர் 12ம் தேதி அன்று மியான்மர் எல்லை பகுதியில் உள்ள மேற்கு காஞ்சனபுரி சோதனைச் சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் 50 மில்லியன் மெத் எனப்படும் போதை மாத்திரைகளை தாய்லாந்து அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஆசியாவில் இரண்டாவது முறையாக அதிக அளவில் போதை மாத்திரைகள் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த போதை மாத்திரைகள் ஆறு சக்கர வாகனத்தில் பெரிய சாக்கு மூட்டைகளில் கடத்தப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இச்சம்பவம் தொடர்பாக வாகனத்தில் இருந்த ஒரு ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்ததற்குப் பிறகு போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.