டிசம்பர் 10ஆம் தேதி அன்று கசாப்புக் கடையில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியைக் கொண்டு கொள்ளையடிக்க முயன்ற 33 வயதான நபரை, புகார் அளித்த 10 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவம் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவின் சந்தர் சாலையில் நடந்தது.
பாதிக்கப்பட்ட முதியவரிடமிருந்து S$10,000 மதிப்புள்ள தங்கச் சங்கிலியை அவர் திருட முயன்றார்.
முதியவர் அவருடன் போராடியதில் அந்த தங்கச் சங்கிலி அறுந்தது.
இதனால் அந்த நபர் நகை மற்றும் கொள்ளை அடிக்க பயன்படுத்திய கருவி ஆகியவற்றை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
சிசிடிவி உதவியுடன் காவல்துறையினர் அந்த நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அந்த நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு, குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் வழங்கப்படும்.