அலட்சியத்தால் பறிபோன வெளிநாட்டு ஊழியரின் உயிர்!! வழக்கின் தீர்ப்பு என்ன?

சிங்கப்பூரில் கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி கட்டுமான ஊழியரான 29 வயதுடைய பங்களாதேஷை சேர்ந்த Hossain Mohammad Sahid வேலையிடத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

தற்போது அந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லிப்ட் பொறியாளரான Wong Ser Yong மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தனது குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனால் அவருக்கு 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் 450 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் நடந்தது.லிப்டை பழுது பார்க்கும் பொழுது இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.

கட்டுமான ஊழியர், லிப்ட் பொறியாளர் ஆகிய இருவரும் வெவ்வேறு கம்பெனியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் Hossain – இன் விலா எலும்பு, இடது கை மற்றும் இடது கால் சிக்கி கொண்டது.

இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அவரின் உடல் பாகங்கள் நன்கு சிக்கி கொண்டிருப்பதால் அவரை மீட்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. அவரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது.