பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்த நபர்!!ஓடும் ரயிலின் கதவை வலுக்கட்டாயமாக திறக்க முயற்சி!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 47 வயதான Vanessa Wang Zi Qi என்ற நபர், பொது இடங்களில் தொந்தரவு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

நவம்பர் 27ஆம் தேதி அன்று Braddell MRT நிலையத்தில் ஓடுகின்ற ரயிலின் கதவைத் திறக்க முயன்றார்.இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு Ang Mo Kio MRT நிலையத்திலும் அதே போன்ற செயலில் ஈடுபட்டார்.

மேலும் ஒரு நபரை அவர் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது.

காவல்துறையின் விசாரணைக்கு SMRT நிறுவனம் உதவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் (IMH) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவர் டிசம்பர் 21 ஆம் தேதி அன்று விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

பொது இடத்தில் தொந்தரவு விளைவித்ததற்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.S$2000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.