துரிதமாக செயல்பட்டு மோசடி காரர்களின் திட்டத்தை முறியடித்த வங்கி ஊழியர்!! குவியும் பாராட்டுகள்!!

சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி ஊழியர் ஒருவர், 79 வயதான பெண் சுமார் S$260,000க்கும் அதிகமான பணத்தை மோசடிகாரர்களிடம் இழப்பதை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அவரின் இந்த துரித நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மோசடிக்காரர்கள் அந்த வயதான பெண்மணியின் வங்கி கணக்கு சில காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளதாக அவரிடம் கூறினர்.

பிறகு அவர்கள் அந்த பெண்ணின் இருப்பிடத்தைப் பற்றி தெரிவிக்கும் படியும், இந்த விசாரணை பற்றிய விவரங்களை யாரிடமும் தெரியப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

மோசடிக்காரர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த வயதான பெண்மணி ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் வைத்திருந்த S$260,000க்கும் அதிகமான முதலீடுகளை விற்றார்.

அந்த பணத்தை மோசடிக்காரர்கள் வழங்கிய வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்ற போது, வங்கி ஊழியர் வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனையை அடையாளம் கண்டார்.

அவர் உடனடியாக வங்கி மோசடி தடுப்புக் குழுவை தொடர்பு கொண்டு நிலைமையை விவரித்தார்.

அவர்கள் மோசடிக்காரர்களின் அனைத்து வங்கி கணக்குகளையும் கண்டறிந்து முடக்கினர்.

மேலும் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக தொடர்பு கொண்டு திட்டத்தைப் பற்றி எச்சரித்தனர்.

இது போன்ற மோசடிகளில் இருந்து தனது வாடிக்கையாளர்களை பாதுகாக்க வங்கி ஊழியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.