FB நண்பர்களே உசார்!! மலிவு விலையை நம்பி சூழ்ச்சி வலையில் சிக்கி விடாதீர்கள்!!!….

சிங்கப்பூரில் லக்கேஜ்களை மலிவு விலையில் விற்பதாக பேஸ்புக்கில் விளம்பரம் செய்து மோசடி செய்யும் மோசடிக்காரர்கள் குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த பேஸ்புக் அக்கவுண்டில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் லோகோ பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.

நவம்பர் முதல் இதுவரை இந்த மோசடியில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் விளம்பரங்களை உண்மையென்று நம்பி குறைந்தபட்சம் S$799 இழந்துள்ளனர்.

பேஸ்புக்கில் உள்ள விளம்பரத்தை அவர்கள் கிளிக் செய்த பிறகு அவர்களின் சுய விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை வழங்குமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

அதன் பிறகு மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் கிரெடிட் கார்டு மூலம் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் ScamShield appஐ install செய்யுமாறு காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் கிரெடிட் கார்டு, சுய விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஒருவேளை பாதிக்கப்பட்டால் பொதுமக்கள் உடனடியாக தங்கள் வங்கி மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.